கடல் நீர்மட்டத்தில் நிலையற்ற தன்மை - குமரியில் படகு போக்குவரத்து தற்காலிகமாக ரத்து
கன்னியாகுமரி, 16 ஆகஸ்ட் (ஹி.ச.) கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டத்தில் நிலையற்ற தன்மை காணப்படுவதால், திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை மண்டபத்திற்கான படகு போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கடல் பகுதியில் நீர்மட்டம் மற்றும்
Kanyakumari Boat


கன்னியாகுமரி, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)

கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டத்தில் நிலையற்ற தன்மை காணப்படுவதால், திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை மண்டபத்திற்கான படகு போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடல் பகுதியில் நீர்மட்டம் மற்றும் கடல் சூழல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால், கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் இருந்து திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்லும் படகு சேவை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் படகு சேவைக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பிற்பகலுக்குப் பிறகு கடல் நீர்மட்டத்தின் நிலைமை சீராக உள்ளதா என்பதைப் பொறுத்து படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படலாம் என பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடல் சூழல் மற்றும் நீர்மட்டத்தைப் பொறுத்தே படகு சேவை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும், சுற்றுலாப் பயணிகள் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN