கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை - மு.க.ஸ்டாலின் கண்டனம்
தமிழ்நாடு, 16 ஆகஸ்ட் (ஹி.ச.) கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவர் அம்மாநில வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில்,
மு.க.ஸ்டாலின்


தமிழ்நாடு, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)

கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவர் அம்மாநில வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில்,

மனித உயிர்கள் குறித்த எந்த மதிப்பும் இல்லாமல் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் கொடூரச் செயல் அதிர்ச்சியளிப்பதாகவும், குற்றமிழைத்தவர்களைக் காப்பாற்றும் எந்த முயற்சியும் நடைபெறக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சம்பவத்தை கொலை வழக்காகப் பதிவு செய்து, வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, இதற்குக் காரணமானவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், மேகதாது விவகாரத்தைப் போல இந்தச் சம்பவத்திலும் தமிழ்நாடு அரசு மவுனம் காக்காமல், கர்நாடக அரசிடம் தனது கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவதுடன், அவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P