Enter your Email Address to subscribe to our newsletters

கோட்டயம், 16 ஆகஸ்ட் (ஹி.ச.)
கேரள மாநிலம்
கோட்டயம் மாவட்டம் பொன் குன்னம் அருகே செருவள்ளி பகுதியில் உள்ள சாலையில் சென்னை பொன்னேரியைச் சேர்ந்த 21 வயது குரு மற்றும் அவரது நண்பர் 21 வயது விக்னேஷ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது வளைவு பகுதியில் முன்னால் சென்றுகொண்டிருந்த லாரியை முந்திச் செல்ல குரு முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராதவிதமாக எதிர்திசையில் வந்த கார் மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது.
மோதலின் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தில் குரு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த விக்னேஷை அப்பகுதி மக்கள் மீட்டு கோட்டயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் சென்னை பொன்னேரியைச் சேர்ந்த குரு என்பது தெரியவந்துள்ளது.
மேலும், விபத்து நடந்த பகுதியிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றிய போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வளைவில் முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட இந்த கோர விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P