கொசஸ்தலை ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள் - தொழிற்சாலை கழிவுகளால் ஏற்பட்டதாக மீனவர்கள் புகார்
சென்னை, 16 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னையை அடுத்த எண்ணூரில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரப் பகுதியில் ஏராளமான மீன்கள் திடீரென செத்து மிதப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆற்றில் கலக்கும் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் நீர் மாசு காரணமாக மீன்கள் இறந்தி
கொசஸ்தலை


சென்னை, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னையை அடுத்த எண்ணூரில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரப் பகுதியில் ஏராளமான மீன்கள் திடீரென செத்து மிதப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்றில் கலக்கும் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் நீர் மாசு காரணமாக மீன்கள் இறந்திருக்கலாம் என அப்பகுதி மீனவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே எண்ணூர்–மணலி தொழிற்பகுதியில் தொழிற்சாலை கழிவுகள், கழிவுநீர் உள்ளிட்டவற்றால் நீர்நிலைகள் மாசுபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது மீன்கள் கொத்து கொத்தாக இறந்து கிடப்பது மீனவர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மீன்கள் இறந்ததற்கான உண்மையான காரணம் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், ஆற்றின் நீர் மற்றும் இறந்த மீன்களின் மாதிரிகளை உடனடியாக சேகரித்து ஆய்வு செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாசுபாடு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டால், அதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P