சென்னை ஆளுநர் மாளிகை சுற்றுச்சுவரில் சொகுசு கார் பயங்கர மோதல் - சுவர் சேதம், 5 பேருக்கு லேசான காயம்
சென்னை, 16 ஆகஸ்ட் (ஹி.ச) சென்னை சைதாப்பேட்டையில் இருந்து கிண்டி ஆளுநர் மாளிகை நோக்கி இன்று காலை அதிவேகமாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று, ஆளுநர் மாளிகை முன்புள்ள இடதுபுற வளைவில் திரும்ப முயன்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
Luxury car crashes violently into Chennai Raj Bhavan perimeter wall;


சென்னை, 16 ஆகஸ்ட் (ஹி.ச)

சென்னை சைதாப்பேட்டையில் இருந்து கிண்டி ஆளுநர் மாளிகை நோக்கி இன்று காலை அதிவேகமாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று, ஆளுநர் மாளிகை முன்புள்ள இடதுபுற வளைவில் திரும்ப முயன்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

இதனால் நிலைதடுமாறிய கார் முதலில் சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் பலமாக மோதியுள்ளது. அதன் பிறகு வேகத்தின் காரணமாக எதிர்ப்புறம் தூக்கி வீசப்பட்ட கார், நேராகச் சென்று ஆளுநர் மாளிகையின் பாதுகாப்பு சுற்றுச்சுவரில் பயங்கர சத்தத்துடன் மோதி நின்றது.

இந்த விபத்தில் ஆளுநர் மாளிகையின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி சேதமடைந்தது. காரின் முன்பகுதியும் பலத்த சேதமடைந்தது.

காரில் பயணம் செய்த ஐந்து பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், அவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் மற்றும் ஆளுநர் மாளிகை பாதுகாப்புப் பிரிவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து அடையாறு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் அதிவேகமாக வந்ததா அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து நடந்ததா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b