Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் அகத்தியர் அருவியும், மணிமுத்தாறு அருவியும் முக்கியமானதாக உள்ளன.
விடுமுறை நாட்களில் இந்த அருவிகளுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.
தற்போது அகத்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், அங்கு செல்லும் பயணிகள் மாற்று சுற்றுலா தலமாக மணிமுத்தாறு அருவியை நோக்கி திரும்பி வருகின்றனர்.
இதனால் மணிமுத்தாறு அருவி பகுதியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.
விடுமுறை நாளான இன்று நெல்லை மட்டுமின்றி தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் மணிமுத்தாறு பகுதிக்கு வந்தனர்.
அருவியில் நீர்வரத்து தற்போதைய நிலையில் குறைவாக இருந்தாலும், சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் வந்த சுற்றுலா பயணிகள் அருவி மற்றும் சுற்றுப்புற இயற்கை காட்சிகளை ரசித்ததுடன், அப்பகுதியில் நீண்ட நேரம் செலவிட்டனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் அருவியில் குளித்து உற்சாகமாக பொழுதை கழித்தனர்.
அகத்தியர் அருவியில் குளிக்க தடை நீடித்து வரும் நிலையில், மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரித்துள்ளது.
இதனால் விடுமுறை நாளில் மணிமுத்தாறு அருவி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் சுற்றுலா பயணிகளால் களைகட்டின.
அதேநேரத்தில், அருவிப் பகுதிகளில் நீர்வரத்து மற்றும் மலைப்பகுதிகளில் நிலவும் வானிலை மாற்றங்களை பொறுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுற்றுலா பயணிகள் அருவிப் பகுதிகளில் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து எச்சரிக்கையுடன் குளிக்க வேண்டியது அவசியம் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ