மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு வனத்துறை அதிரடி அறிவுறுத்தல் – நலத்திட்டம் பெற்ற 286 பேரின் பட்டியல் வெளியீடு
சென்னை, 16 ஆகஸ்ட் (ஹி.ச) திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகளை காலி செய்ய வனத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அரசின் மூலம் தேவையான நலத்திட்டங்களைப் பெற்றுக்கொண்டு குடியிருப்புகளை காலி செய்யுமாறு தொழிலாளர்
Anj


சென்னை, 16 ஆகஸ்ட் (ஹி.ச)

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகளை காலி செய்ய வனத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

அரசின் மூலம் தேவையான நலத்திட்டங்களைப் பெற்றுக்கொண்டு குடியிருப்புகளை காலி செய்யுமாறு தொழிலாளர்களுக்கு வனத்துறை வலியுறுத்தியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் அரசின் திட்டங்கள் மூலம் குடியிருப்புகள் மற்றும் நலத்திட்டங்களைப் பெற்றவர்களின் பெயர் பட்டியலை வனத்துறை வெளியிட்டுள்ளது.

இதுவரை அரசின் நலத்திட்டங்களைப் பெற்ற 286 பேரின் விவரங்கள், கிராமங்கள் வாரியாக விளம்பரப் பதாகைகளில் அச்சிடப்பட்டு வனத்துறையின் சோதனைச் சாவடியில் வைக்கப்பட்டுள்ளன.

அரசின் திட்டங்களைப் பெறவில்லை எனக் கூறி தொடர்ந்து மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதிகளுக்கு வருபவர்களுக்கும் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாஞ்சோலை பகுதியில் உள்ள குடியிருப்புகளை விரைந்து காலி செய்ய வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ள வனத்துறை, தொழிலாளர்களை குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ