தமிழர்கள் சுட்டுக்கொன்ற கர்நாடக அரசிற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் - பெ.சண்முகம்
சென்னை, 16 ஆகஸ்ட் (ஹி.ச.) கர்நாடகத்தில் வனப்பகுதியில் மாடுகளைத் தேடிச் சென்ற தமிழர்களை, வேட்டையாடியதாக குற்றம்சாட்டப்பட்டு சுட்டுக்கொன்ற கர்நாடக அரசுக்கு தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செ
TVK Vijay CPM Shanmugam


சென்னை, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)

கர்நாடகத்தில் வனப்பகுதியில் மாடுகளைத் தேடிச் சென்ற தமிழர்களை, வேட்டையாடியதாக குற்றம்சாட்டப்பட்டு சுட்டுக்கொன்ற கர்நாடக அரசுக்கு தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில்,

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹானூர் தாலுகா, தோமையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த, தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட விவசாயிகள் வழக்கமாக மாடு மேய்க்கும் வனப்பகுதிக்குள் காணாமல் போன மாடுகளைத் தேடிச் சென்ற அந்தோணி ராஜ், ஜான், குமார் ஆகியோரை கர்நாடக மாநில வனத்துறையினர் நேற்று சுட்டுக் கொலை செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

தங்கள் குற்றத்தை மறைக்க, அவர்கள் வேட்டையாடினார்கள் என்று வனத்துறையினர் பொய்யான குற்றச்சாட்டைத் தெரிவிக்கின்றனர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுக் கொலையை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சம்பந்தப்பட்ட வனத்துறையினரைப் பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும்.

கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்ற அடிப்படையில், தமிழ்நாடு அரசு தனது கண்டனத்தைக் கர்நாடக அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN