Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 16 ஆகஸ்ட் (ஹி.ச.)
சேலம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று வினாடிக்கு 4,385 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 6,179 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 81.31 அடியாக உள்ளது. அணையில் மொத்தம் 43.27 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் தாக்கம் மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைப் பொறுத்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்தில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
தற்போதைய நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக அணையின் நீர் இருப்பும் உயர்ந்து வருவது விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
அணையின் நீர்மட்டம், நீர்வரத்து மற்றும் வெளியேற்றப்படும் நீரின் அளவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P