Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று(ஆகஸ்ட் 16, 2026) தமிழகம் வந்தடைந்தார்.
சென்னை விமான நிலையத்திற்கு மதியம் 12.30 மணி அளவில் வருகை தந்த இந்திய குடியரசு துணைத் தலைவரை தமிழ்நாடு ஆளுநர் இராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், மற்றும் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் பொன்னாடை மற்றும் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.
பின்னர் அவர், செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள தனியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 22-வது பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொள்ள புறப்பட்டு சென்றார்.
Hindusthan Samachar / vidya.b