ஆவணி மாத பூஜை - சபரிமலை நடை இன்று மாலை திறப்பு
சென்னை, 16 ஆகஸ்ட் (ஹி.ச.) மலையாள சிங்ஙம் மாதம் மற்றும் தமிழின் ஆவணி மாதாந்திர பூஜைகளை முன்னிட்டு பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (ஆகஸ்ட் 16) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. சபரிமலை தந்திரியாக மீண்டும் பொறுப்பேற்கும் கண்டரரு பிரம
Sabarimala


சென்னை, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)

மலையாள சிங்ஙம் மாதம் மற்றும் தமிழின் ஆவணி மாதாந்திர பூஜைகளை முன்னிட்டு பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (ஆகஸ்ட் 16) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

சபரிமலை தந்திரியாக மீண்டும் பொறுப்பேற்கும் கண்டரரு பிரம்மதத்தன் தலைமையில், மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி கோவில் நடை திறந்து தீபம் ஏற்றுகிறார்.

இதனைத் தொடர்ந்து தினமும் வழக்கமான பூஜைகள் நடைபெறும். ஆகஸ்ட் 21ஆம் தேதி இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடப்பட்டு நடை அடைக்கப்படும்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுக்காக மீண்டும் ஆகஸ்ட் 24ஆம் தேதி நடை திறக்கப்பட்டு, ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

பக்தர்கள் தரிசனத்திற்கான முன்பதிவை அதிகாரப்பூர்வ இணையதளங்களிலும், தங்கும் விடுதிக்கான முன்பதிவை திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் மேற்கொள்ளலாம்.

அடுத்த 5 நாட்களுக்கு இயல்பான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் மழைக்கோட் மற்றும் குடையுடன் பயணம் மேற்கொள்ளுமாறு திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ