கோவில் மாநகரம் ‘கொலை மாநகரமா?முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு
சென்னை , 16 ஆகஸ்ட் (ஹி.ச.) கோவில் மாநகரம் ‘கொலை மாநகரமா? என முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தெரிவித்துள்ளதாவது, நாட்டின் 80வது சுதந்திர தின விழா, தமிழக அரசி
a


சென்னை , 16 ஆகஸ்ட் (ஹி.ச.)

கோவில் மாநகரம்

‘கொலை மாநகரமா? என முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு

வைத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தெரிவித்துள்ளதாவது,

நாட்டின் 80வது சுதந்திர தின விழா, தமிழக அரசின் சார்பில், சென்னை புனித சார்ஜ் கோட்டை நடைபெற்ற விழாவில், முதல்வர் விஜய் தேசிய கொடி ஏற்றி வைத்து, முதன்முதலாக பேசிய பல்வேறு கருத்துக்கள் மத்தியில் கவனம் பெற்ற கருத்தாக, மக்களே, ஓட்டு போட்டு முதல்வரை ஆக்கியாச்சு, நம்ம கடமை முடிஞ்சுச்சு என என்னை விட்டு ஒதுங்கி விடாதீர்கள்.

நீங்கள் தான் ஆட்சியாளர்கள்; நாங்கள் அனைவரும் உங்கள் சேவகர்கள். அதில் முக்கியமாக, மக்கள் அரசோடு இணைந்து நிற்க வேண்டும் ஏன் அப்படி பேசினார் நம்ம முதல்வர்? என்பது இன்றைக்கு தமிழகத்தில் விவாதமாக இருக்கிறது.

100 நாள் தவெக ஆட்சியில் மக்கள் அரசிடமிருந்து விலகி இருக்கத் தொடங்கிவிட்டார்களா? முதல்வர் விஜய்யின் சுதந்திர தின விழா பேச்சு, அதற்கு ஆதாரமாக அமைந்திருக்கிறது

ஏன் முதல்வர் அவர்கள் அப்படி பேசினார்கள்? மக்கள் ஏன் தவெக அரசை விட்டு விலகி இருக்க வேண்டும்? தவெக கற்பனை காவியமான தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களை தற்போது பட்ஜெட்டில் கூட அறிவிக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறோம், அறிவித்த பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை,பெண்கள் பாதுகாப்பு, லாக்கப் மரணம் ,சட்டம் ஒழுங்கு, அதேபோல போதைப்பொருள் நடமாட்டம், கட்டுப்படுத்துவதில் விஜய் வீர முழக்கமிட்டு தேர்தலுக்கு முன்பாக பேசினார். தற்போது அதில் தொடர்ந்து மௌனம் காத்து வருவது என்பது கோட்டையில் அமர்ந்ததற்கு பின்பு இந்த பிரச்சனைகளில் கோட்டை விட்டாரா? முதல்வர் விஜய் என்கிற ஒரு கோபம் மக்கள் மத்தியிலே ஏற்பட்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது.

சரி,தமிழகத்தின் ஜீவாதார உரிமை நிலைநாட்டுவதில் அக்கறை எப்படி செலுத்துகிறார்? அது ஒரு உயிர்நாடி பிரச்சனை. அம்மா அவர்கள் 84 மணி நேரம் உண்ணாவிரதம், எடப்பாடியார் சட்டப் போராட்டம் நடத்தி தொடர்ந்து

, 22 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கினார். இந்த வரலாறு எல்லாம் விஜய்க்கு தெரிந்திருந்தும் கூட, அவர் எப்படி இதை கையாண்டார், எப்படி அக்கறை செலுத்தினார்? என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைக்கு கோவையிலும்,, சென்னையிலும் போதைப்பொருள் புழக்கத்தால் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்ற படுகொலை சம்பவங்களின் பயத்தில் உறைந்து போயிருக்கிறது தமிழகம். தொடர்ந்து மதுரை மாவட்டத்தில கடந்த 11 நாட்களில் மட்டும் 8 படுகொலைகள் நடந்திருக்கிறது. கோயில் மாநகரம் என பெயர் பெற்ற மதுரை மாநகர், கொலை மாநகராக மாறி வருவது மதுரை மக்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியால் இன்றைக்கு உறைந்து போயிருக்கிறார்கள்.

கடந்த ஜூலை 30ஆம் தேதி முதல் இந்த மாதம் ஒன்பதாம் தேதி வரை 11 நாட்களில் சோழவந்தான் போலீஸ் சரகத்தில் சஞ்சய்குமார், கூடல்புதூர் போலீஸ் சரகத்தில் ரிபிக் ராஜன், சிந்துபட்டி போலீஸ் சரகத்தில் பெருமாள், சிந்தாமணி பகுதியில் மணி மற்றும் முருகன் , தெப்பக்குளம் பகுதியில் சாந்தா என்ற பெண், வாடிப்பட்டி பகுதியிலே மணிகண்டன், சிலைமான் பகுதியிலே உமர்பரூக் என தொடர் படுகொலை சம்பவங்கள் மதுரை மாவட்டத்தில் அரங்கேறி வருகின்றன.

இதனால் தமிழகமே அதிர்ச்சியில், அச்சத்திலும் இருப்பதைப் பற்றி முதல்வர் அக்கறை செலுத்தாமல் இருக்கிறார் அப்படியானால், முதல்வரின் அக்கறை எதில் இருக்கிறது என்பதை நேற்று 80வது சுதந்திர தின விழா கோட்டையில் கொடியேற்றி வரலாற்று சிறப்புமிக்க அவருடைய பேச்சு அமர்ந்திருந்தது.

நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழ்நாட்டின் தன்மானத்தை உலக அரங்கிலே உயர்த்தி இருக்கிறது என்றுதான் நாம் சொல்ல வேண்டும்., ஏனென்று சொன்னால், சுதந்திர தின விழா மேடையில் முதல் வரிசையில் நம்ம முதல்வரை பெற்றெடுத்த தாயும் தந்தைக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பக்கத்திலே விஜய் அவர்களின் அன்புக்குரியவர்களுக்கு சீட்டு ஒதுக்கப்பட்டிருப்பது இதன் மூலம் இன்றைய இளைய தலைமுறையான ஜென்சி தலைமுறைக்கு முதல்வர் விஜய் சொல்லும் செய்தி என்ன?

விஜய் போல் இருக்க வேண்டும் என்று விஜய்யின் பெயரை தன் பெயருக்கு முன்னால் வைத்துக் கொள்கிறார்கள். விஜய் தவறான முன் உதாரணத்தை சுதந்திர தின விழாவில் அரங்கேற்றி இருக்கிறாரே, இதுதான் நமக்கு புரியவில்லை.

விஜய்க்கு வாக்களித்த ஜென்சி தலைமுறைக்கு வேண்டுமானால் இது புரிந்திருக்கலாம். புரிந்தால் சொல்லுங்கள், தமிழ்நாட்டு மக்கள் அவரோடு காத்திருக்கிறோம். இதனுடைய அர்த்தம் என்ன?

ஆனால் ஒன்று நமக்கு நல்லா புரியுது, வீரத்திற்கும், விவேகத்திற்கும், தியாகத்திற்கும் ,உழைப்பிற்கும், உண்மைக்கும், ஒழுக்கத்திற்கும், அன்புக்கும், பண்புக்கும், பாரம்பரியத்திற்கும், நாகரிகத்திற்கும், கருணைக்கும், ஆன்மீகத்திற்கும், அரசியலுக்கும், நாட்டுப் பற்றுக்கும் வரலாறு படைத்திட்ட நம் தாய் தமிழ்நாடு, ஆனால் நேற்றைய சுதந்திர தின விழா முன்வரிசையிலே இடம் ஒதுக்கீடு செய்து, அன்புக்குரியவர்களை அடையாளப்படுத்தி, தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டிருக்கின்ற மிகப்பெரிய மாற்றத்தை நாம் என்னவென்று எடுத்துக் கொள்வது?

இதைப்பற்றி பேசினால், அவதூறு பேசுகிறேன் என்று சொல்லுகிறார்கள். வேற என்ன சொல்ல முடியும்? தாய் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடு என்று சொல்லுவதா? இன்னும் என்னவெல்லாம் இந்த தமிழகத்திலே நடக்குமோ? என்று யாருக்கும் தெரியாது.

மொத்தத்திலே மக்களே, மாற்றம் கேட்டு வாக்களித்த உங்களுக்கு அறம் சார்ந்த வாழ்க்கைக்கு வழிகாட்டும் வரலாறு காணாத மாற்றமாக சுதந்திர தின விழாவிலே அன்புக்குரியவர்களை அடையாளப்படுத்தும் முதல் வரிசை அணி வகுப்பை அச்சமின்றி அரங்கேற்றி இருக்கிறார் நம்ம முதல்வர் விஜய் அவர்கள்.

கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற தியாகத்தின் வடிவமான படை வீரர்களின் சீர்மிகு அணிவகுப்பினால் முதல்வருக்கு கிடைத்த அந்த முதல் மரியாதையை தனது அன்புக்குரியவர்களுக்கு பங்கீட்டுக் கொடுத்திருக்கிற காட்சி, ஒருவேளை தமிழ்நாட்டின் அரியணையும் தனது அன்புக்குரியவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பாரோ?

மேடம் திரிஷா அவர்களை தன் அரியணைக்கு பக்கத்து அரியணையில் துணை முதல்வராக அமர்த்தி விடுவாரோ? என்கிற அதிர்ச்சியிலே உறைந்து போயிருக்கிறது அன்னை தமிழகம். ஏனென்றால், விஜய் இப்போது எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஜென்சி தலைமுறை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கிற ஒரே தலைவர். ஜென்சி தலைமுறையின் நம்பிக்கை பெற்ற தலைவர். ஜென்சி தலைமுறையின் வழிகாட்டியாக இருக்கக்கூடியவர். ஜென்சி தலைமுறைக்கு அறம் சார்ந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதற்காக அவதாரம் எடுத்து வந்த கடவுள் நம்ம விஜய்.

தன்னுடைய அன்புக்குரிய மேடம் திரிஷா அவர்களுக்கு முதல் வரிசையிலே வி.வி.ஐ.பி.அந்தஸ்தில் அரியணையை ஒதுக்கிக் கொடுத்தவர், தன் முதலமைச்சர் அரியாசனத்திற்கு அருகிலேயே துணை முதலமைச்சர் அரியாசனத்தையும் பகிர்ந்து கொடுக்க முன்வருவாரா? என்கிற அதிர்ச்சியிலே அதிர்ந்து போயிருக்கிறது அன்னை தமிழகம்.

மொத்தத்திலே 80வது சுதந்திர தின விழாவில் தமிழகம் சரித்திர சாதனை படைக்கும் என்று நாம் எதிர்பார்த்திருந்தவர்களுக்கு தவெக அரசு தடுமாறி நிற்கிறது என்பது மட்டும் நமக்கு புரிந்திருக்கிறது.

அதனால்தான் விஜய் ,மக்களே என்னை விட்டு விலகி விடாதீர்கள் என்று கெஞ்சத் தொடங்கி இருக்கிறார்

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அந்த வீடியோ பதிவில் கூறினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA