பண்ட்லா கணேஷ் மகள் திருமணம் - தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்பு
ஐதராபாத் , 16 ஆகஸ்ட் (ஹி.ச.) பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான பண்ட்லா கணேஷின் மகள் ஜனனி–சூர்யதேஜா திருமண விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமண விழாவில் தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டு, நவதம்பதிகளை வாழ்த்தி
A


ஐதராபாத் , 16 ஆகஸ்ட் (ஹி.ச.)

பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான பண்ட்லா கணேஷின் மகள் ஜனனி–சூர்யதேஜா திருமண விழா கோலாகலமாக நடைபெற்றது.

இந்த திருமண விழாவில் தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டு, நவதம்பதிகளை வாழ்த்தி ஆசீர்வதித்தார்.

திருமண விழாவுக்கு வந்த முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியை பண்ட்லா கணேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அன்புடன் வரவேற்றனர்.

பின்னர் நவதம்பதிகளை சந்தித்த முதல்-மந்திரி, அவர்களுக்கு திருமண வாழ்த்துகளை தெரிவித்ததுடன், அவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், வளமாகவும் அமைய வேண்டும் என்று வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் மகேஷ் குமார் கவுடும் கலந்து கொண்டார்.

அவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பண்ட்லா கணேஷ் குடும்பத்தினருடன் கலந்துரையாடி, நவதம்பதிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மேலும், திரையுலகம் மற்றும் அரசியல் துறையைச் சேர்ந்த பல்வேறு முக்கிய பிரமுகர்கள் திருமண விழாவில் கலந்து கொண்டு நவதம்பதிகளை வாழ்த்தினர்.

பிரபலங்களின் வருகையால் திருமண விழா களைகட்டியது.

விழாவுக்கு வந்த அனைவரையும் பண்ட்லா கணேஷ் உற்சாகத்துடன் வரவேற்றார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA