6 மாதங்களுக்கு ஒருமுறை அரசு வேலை - ரேவந்த் ரெட்டி அறிவிப்பு
ஹைதராபாத் , 16 ஆகஸ்ட் (ஹி.ச.) காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த 2½ ஆண்டுகளில் 72 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மேலும் 10 ஆயிரம் பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது அறிக்கையில் கூறி
A


ஹைதராபாத் , 16 ஆகஸ்ட் (ஹி.ச.)

காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த 2½ ஆண்டுகளில் 72 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

மேலும் 10 ஆயிரம் பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது அறிக்கையில் கூறியதாவது,

இனி ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் அரசு வேலைக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்படும். இளைஞர்கள் எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரசாரங்களுக்கு செவி சாய்க்காமல், போட்டித்தேர்வுகளுக்கு தீவிரமாக தயாராக வேண்டும்.

ஸ்மார்ட் ரேஷன் கார்டு

ஏழை மக்களுக்கு வழங்கப்படும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வெறும் காகிதம் அல்ல. அது அவர்களின் பசியை போக்குவதுடன், சுயமரியாதையையும் காக்கும் அடையாளமாகும்.

முந்தைய ஆட்சிகளில் தரமற்ற அரிசி வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டிய ரேவந்த் ரெட்டி, தங்கள் அரசு ஏழை மக்களுக்கு தரமான மெல்லிய அரிசியை வழங்கி வருவதாக தெரிவித்தார்.

அதேபோல், கடந்த காலங்களில் தரமற்ற சேலைகள் வழங்கப்பட்டதாக கூறிய அவர், தங்கள் அரசு பெண்களின் கவுரவத்தை உயர்த்தும் வகையில் தரமான சேலைகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

பிஆர்எஸ் மீது குற்றச்சாட்டு

தெலங்கானா வளர்ச்சி அடையக்கூடாது என்றும், மாநிலத்தில் வறட்சி ஏற்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சியான பிஆர்எஸ் தலைவர்கள் ‘சூனியம்’ மற்றும் அகோர பூஜைகள் செய்வதாக ரேவந்த் ரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் கோவில்களில் நள்ளிரவில் நடைபெற்றதாக கூறப்படும் பூஜைகளின் பின்னணி என்ன என்பதை பிஆர்எஸ் தலைவர்கள் மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்திரம்மா வீடுகள்

தங்கள் அரசு மஞ்சூர் செய்த 7 லட்சம் இந்திரம்மா வீடுகள் அமைந்துள்ள பகுதிகளிலேயே சென்று மக்களிடம் வாக்கு கேட்போம் என்று ரேவந்த் ரெட்டி கூறினார்.

பிஆர்எஸ் ஆட்சியில் கட்டப்பட்டதாக கூறப்படும் வீடுகளின் அருகில் சென்று அவர்களால் வாக்கு கேட்க முடியுமா? என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA