தாளவாடியில் கடைக்குள் புகுந்து பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர் - தற்கொலைக்கு முயற்சி
ஈரோடு 16 ஆகஸ்ட் (ஹி.ச.) ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள ஓசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேந்திரன் (35),இவர் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த அஞ்சு (32), தாளவாடி–ஓசூர் சாலையில் உள்ள தனியார் பேன்சி கடையில்
கத்திக்குத்து


ஈரோடு 16 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள ஓசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேந்திரன் (35),இவர் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

அதே பகுதியைச் சேர்ந்த அஞ்சு (32), தாளவாடி–ஓசூர் சாலையில் உள்ள தனியார் பேன்சி கடையில் வேலை செய்து வருகிறார்.

அஞ்சுவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது தனது தாயார் வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று வழக்கம்போல் அஞ்சு பேன்சி கடையில் பணியில் இருந்துள்ளார். அப்போது கடைக்குள் சென்ற நாகேந்திரன், தான் வைத்திருந்த கத்தியால் அஞ்சுவை குத்தியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த அஞ்சு அலறியுள்ளார்.

அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக கடைக்கு ஓடி வந்து அவரை மீட்டுள்ளனர்.

இதற்கிடையே, பெண்ணை கத்தியால் குத்திய நாகேந்திரன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர் அவர் குருணை மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து சென்றவர்கள் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அஞ்சுவுக்கும் நாகேந்திரனுக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்ததாகவும், கடந்த சில நாட்களாக அஞ்சு நாகேந்திரனை தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த நாகேந்திரன், அஞ்சுவை கத்தியால் குத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தாளவாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கத்தியால் தாக்குதல் நடத்தியதற்கான காரணம் மற்றும் இருவருக்கும் இடையேயான முன்பிருந்த தொடர்பு உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடைக்குள் புகுந்து பெண்ணை இளைஞர் கத்தியால் குத்தியதுடன், பின்னர் அவரே தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தாளவாடி பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam