Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அகஸ்தியர் அருவி, ஆன்மீக மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் முக்கிய இடமாக விளங்குகிறது
வருடம் முழுவதும் தண்ணீர் கொட்டும் இந்த அருவி, அடர்ந்த காடுகள் மற்றும் பாறைகளுக்கு இடையே மலையேற்றம் செய்து செல்லும் வகையில் ஒரு சிறந்த இயற்கை அனுபவத்தைத் தருகிறது.
இந்த நிலையில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு பாபநாசம் பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம்.
இதனால் வனப்பகுதியில் கடும் நெரிசல் ஏற்படுவதுடன், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அகஸ்தியர் அருவியில் குளிப்பதற்கு 10 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த தடை உத்தரவு இன்றுடன் நிறைவடைவதை அடுத்து, நாளை முதல் சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வழக்கம் போல் அருவியில் குளித்து மகிழ அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனப்பகுதிக்குள் செல்லும் போது பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்ல வனத்துறை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மேலும், பாதுகாப்புக் காரணங்களுக்காக மாலை 4 மணி வரை மட்டுமே வழக்கமாக இங்கு அனுமதி வழங்கப்படும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b