Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை 16 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருவண்ணாமலை மாவட்டம் ஊசாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் அதே பகுதியில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார்.
இவரது மாமனார் பரசுராமன் இவர்கள் இருவருக்கும் இடையே குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது.
குடும்பத் தகராறு காரணமாக இன்று திருவண்ணாமலை வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஊசாம்பாடி அருகே பொதுமக்கள் முன்னிலையில் அறிவாளால் முருகன் தனது மாமனாரை சரமாரியாக வெட்டியுள்ளார்.
அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக வெட்டப்பட்ட பரசுராமனை உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மாமனாரை வெட்டிய மருமகன் தனது இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற போது பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் தனது மாமனாரை வெட்டிய மருமகன் அங்கேயும் இங்கேயுமாக அறிவாளுடன் அலைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam