மிசா கைது குறித்து பொதுவெளியில் சொல்ல முடியுமா? - உதயநிதி ஸ்டாலினுக்கு த.வெ.க கடும் கண்டனம்
சென்னை, 16 ஆகஸ்ட் (ஹி.ச.) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து தமிழக வெற்றிக் கழகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அரசியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் மோதும் திறனும், திராணியும் இல்லாவிட்டாலும், வாய்ச்சவடால் விடுவ
தவெக


சென்னை, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து தமிழக வெற்றிக் கழகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அரசியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் மோதும் திறனும், திராணியும் இல்லாவிட்டாலும், வாய்ச்சவடால் விடுவதில் உதயநிதி ஸ்டாலினுக்கு குறைவில்லை என தவெக விமர்சித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் என திமுகவினரும், அக்கட்சியின் ஆதரவாளர்களும் தொடர்ந்து கூறி வருவதை சுட்டிக்காட்டியுள்ள தவெக, “இது தாத்தா காலம் என எண்ணி வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டியிருக்கிறார்” என கடுமையாக விமர்சித்துள்ளது.

மேலும், “என்ன சொன்னாலும் நம்புவதற்கு தமிழ்நாட்டு மக்கள் அறிவில்லாதவர்கள் அல்ல” என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

பெண்கள் குறித்து பொதுவெளியில் ஆபாசமாகப் பேசும்போது வராத வெட்கம், பெண்களை ஆபாசமாகப் பேசியதால் கைது செய்யப்பட்டேன் என்று கூறும்போது வருகிறதா என்றும் உதயநிதி ஸ்டாலினை நோக்கி தவெக கேள்வி எழுப்பியுள்ளது.

இறுதியாக, “உங்கள் அப்பா மிசாவில்தான் கைது செய்யப்பட்டாரா என்பதை பொதுவெளியில் சொல்ல முடியுமா?” என மு.க.ஸ்டாலினின் மிசா கைது தொடர்பாகவும் தமிழக வெற்றிக் கழகம் கேள்வி எழுப்பியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P