Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)
கோவையில் தொழில்முனைவோர் மற்றும் பயிற்சியாளர்களை ஒரே தளத்தில் இணைக்கும் வகையில், ‘யூனிகார்ன் கோச் உச்சி மாநாடு 2026’ என்ற நான்கு நாள் மாநாடு தொடங்கியது.
அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில், சாதனை, சமூகப் பங்களிப்பு, ஆன்மிக வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தொழில் வளர்ச்சி மற்றும் சிறப்பான அங்கீகாரம் உள்ளிட்டவற்றை மையமாகக் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாநாட்டை பிஞ்சி மார்க்கெட்டிங் நிறுவனத்தின் நிறுவனர் கோபால் கிருஷ்ணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
தொழில்முனைவோர் மற்றும் பயிற்சியாளர்களை ஒருங்கிணைத்து, அவர்களின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வழிகாட்டும் நோக்கில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல் நாளில் சிறப்பு உரைகள், கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாநாட்டின் முக்கிய நிகழ்வாக 23 ‘யூனிகார்ன்’ விருதுகள் வழங்கப்பட்டன. ஒரு கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் வருவாய் ஈட்டிய பயிற்சியாளர்களின் சாதனையைப் பாராட்டும் வகையில் 48 பயிற்சியாளர்களுக்கு அங்கீகாரமும் விருதுகளும் வழங்கப்பட்டன.
கோபால் கிருஷ்ணன் மற்றும் சந்தோஷ் ஆகியோர் விருதுகளை வழங்கி அவர்களை கவுரவித்தனர்.
மேலும், அடுத்தகட்ட சாதனையை நோக்கிப் பயணித்து வரும் பயிற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் 25 ‘வளரும் யூனிகார்ன்’ விருதுகளும் வழங்கப்பட்டன.
இதுகுறித்து கோபால் கிருஷ்ணன் கூறுகையில், வருவாய் சாதனையை மட்டுமே கொண்டாடாமல், சமூகத்திற்கான பங்களிப்பு, தனிமனித மாற்றம் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அடுத்தகட்ட வளர்ச்சியை உருவாக்குவதே மாநாட்டின் முக்கிய நோக்கம் என்றார்.
மேலும், மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் ‘அனாதி’ அறக்கட்டளையின் சமூகப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் மாநாடு நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில்,தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழில்முனைவோர் மற்றும் பயிற்சியாளர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P