தக்காளி விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய தோட்டக்கலைத் துறை அழைப்பு
சேலம், 16 ஆகஸ்ட் (ஹி.ச.) சேலம் மாவட்டத்தில் தக்காளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது. சேலம், ஓமலூர், தாரமங்கலம், காடையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது தக்காளி பயிரிட்டுள்
tomato farmers to avail crop insurance.


சேலம், 16 ஆகஸ்ட் (ஹி.ச.)

சேலம் மாவட்டத்தில் தக்காளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

சேலம், ஓமலூர், தாரமங்கலம், காடையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் இயற்கை சீற்றங்கள், பருவநிலை மாற்றம் மற்றும் பூச்சி தாக்குதல் போன்ற இடர்பாடுகளில் இருந்து தங்கள் பயிரை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் உடனடியாக பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

தக்காளி போன்ற காய்கறி பயிர்களில் அடிக்கடி ஏற்படும் விலை வீழ்ச்சி மற்றும் மகசூல் இழப்பை ஈடு செய்ய இந்த காப்பீட்டு திட்டம் பெரிதும் உதவும் என்று தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டத்தின் கீழ் தக்காளி விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு 1858 ரூபாய் பிரீமியம் தொகை செலுத்தி தங்கள் பயிரை காப்பீடு செய்து கொள்ளலாம்.

பயிர் சேதம் ஏற்படும் பட்சத்தில் அரசு மூலம் உரிய இழப்பீடு வழங்கப்படும்.

எனவே தக்காளி பயிரிட்டுள்ள அனைத்து விவசாயிகளும் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் வரும்

ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் தங்களது ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், சிட்டா, அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களுடன் அருகில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகம் அல்லது பொது சேவை மையத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b