மாணவர் கொலையில் போதைப்பொருள் தொடர்பு - சட்டப்பேரவையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ எஸ்.பி. வேலுமணி பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.) மாணவர் கொலை வழக்கில் போதைப்பொருள் தொடர்பு இருப்பதாக சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். திமுக ஆட்சியில் கடந்த காலங்களில் எதிர்க்கட்சியினருக்கு பேச வாய்ப்பு மறுக்கப்ப
மாணவர் கொலையில் போதைப்பொருள் தொடர்பு - சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏ எஸ்.பி. வேலுமணி பரபரப்பு குற்றச்சாட்டு


சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.)

மாணவர் கொலை வழக்கில் போதைப்பொருள் தொடர்பு இருப்பதாக சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

திமுக ஆட்சியில் கடந்த காலங்களில் எதிர்க்கட்சியினருக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்ததாகவும், தற்போது பேசுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி முக்கியமான ஒரு விவகாரத்தை அவையின் கவனத்திற்கு கொண்டு வருவதாக தெரிவித்தார்.

சமீபத்தில் நடைபெற்ற மாணவர் கொலை சம்பவத்தின் பின்னணியில் போதைப்பொருள் புழக்கம் இருப்பதாகவும், இது சாதாரண கொலை வழக்கு அல்ல என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்த கொலைக்கும் போதைப்பொருள் கும்பலுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் கூறினார்.

மேலும், இந்த விவகாரத்தில் காவல்துறை அரசுக்கு உண்மையான மற்றும் சரியான தகவலை வழங்கவில்லை என்றும், உண்மை நிலவரத்தை மறைப்பதாகவும் அவர் கடுமையாக சாடினார்.

காவல்துறையின் தவறான தகவல்களால் அரசு தவறாக வழிநடத்தப்படுவதாகவும், இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.

போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / vidya.b