Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழக சட்டப்பேரவையில் இன்று மாணவர் கொலை தொடர்பான விவாதத்தின் போது பாஜக சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன் காரசாரமாக பேசினார்.
மாணவர் கொலை சம்பவம் குறித்து தெளிவான விவரங்கள் இதுவரை வெளிவரவில்லை என்றும், இந்த கொலையில் எது உண்மை, எது வதந்தி என்பதை புரிந்து கொள்ள முடியாத குழப்பமான சூழல் நிலவுவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
மாணவர்களின் பாதுகாப்பு என்பது அரசின் முதன்மையான கடமை என்று குறிப்பிட்ட போஜராஜன், இது போன்ற கொடூர சம்பவங்கள் மாணவர் சமுதாயத்தினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட வழக்கில் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என்றும், விசாரணையின் முன்னேற்றம் குறித்து அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் பேசிய அவர், எதிர்காலத்தில் இதுபோன்ற துயரமான நிலை எந்த மாணவருக்கும் ஏற்படக்கூடாது என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பள்ளி, கல்லூரி வளாகங்களில் பாதுகாப்பை பலப்படுத்தவும், மாணவர்களுக்கு தேவையான விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன் சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / vidya.b