மின்சாரப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் - நயினார் நாகேந்திரன்
சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச) தொழில்துறையை காக்க மின்சாரப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். அதில், சென்னை முதல் கோவை வரை நிலவும் லோ-வோல்டேஜ் பிரச்சினையால் ம
Thoothukudi Nainar Nagenthran


சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச)

தொழில்துறையை காக்க மின்சாரப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

அதில்,

சென்னை முதல் கோவை வரை நிலவும் லோ-வோல்டேஜ் பிரச்சினையால் மக்களின் டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் பழுதாவதாக ஊடகங்களில் வரும் செய்தி கவலையளிக்கிறது.

வெயில் காலம் முடிந்தும் மின் தேவையைச் சரியாகக் கையாளத் தெரியாத தவெக அரசு, மக்கள் மீது தேவையற்ற பொருளாதாரச் சுமையை ஏற்றியுள்ளது. இந்த நிர்வாகத் தோல்வியும் அரசின் மெத்தனப் போக்கும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

வீடுகள் மட்டுமல்லாது, கோவை, விழுப்புரம் போன்ற தொழில் நகரங்களில் நிலவும் லோ-வோல்டேஜ் பிரச்சினையால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் பழுதாகி உற்பத்தி மொத்தமாக முடங்கியுள்ளதாகத் தொழில்துறையினரே வேதனையுடன் தெரிவிக்கின்றனர். ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே தொழில்துறையைச் சீரழித்த பெருமை இந்த தவெக அரசையே சாரும்.

மின் வாரியப் பராமரிப்புப் பணிகளில் தோல்வி ஏற்பட்டுள்ளதை அதிகாரிகளே ஒப்புக்கொள்ளும் நிலையில், மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் அவர்கள் வெற்று வாக்குறுதிகள் அளிப்பதை நிறுத்திவிட்டு, இப்பிரச்சனைக்குத் தொழில்நுட்ப ரீதியாகப் போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN