Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 17 ஆகஸ்ட் (ஹி.ச.)
பாஜகவின் புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் அறிவித்துள்ளார்.
இதில் 13 தேசிய துணைத் தலைவர்கள், 8 தேசிய பொதுச் செயலாளர்கள், 16 தேசியச் செயலாளர்கள் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா, மூத்த தலைவர் ராம் மாதவ், முன்னாள் உத்தரகாண்ட் முதலமைச்சர் தீரத் சிங் ராவத் உள்ளிட்டோர் தேசிய துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கட்சியின் தேசிய பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பி.எல். சந்தோஷ் தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு) பதவியில் தொடர்கிறார். 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பல்வேறு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையிலும், கட்சியின் அமைப்பை வலுப்படுத்தும் நோக்கிலும் புதிய நிர்வாகிகள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய நிர்வாகிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P