100 நாட்கள் நிறைவு தமிழக வெற்றிக் கழக ஆட்சி ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி - முதல்வர் விஜய் பெருமிதம்
சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்து 100 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு, முதலமைச்சர் விஜய் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது பெருமிதத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளி
Chief Minister Vijay expresses pride.


சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்து 100 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு, முதலமைச்சர் விஜய் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது பெருமிதத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

இந்த 100 நாள் ஆட்சி என்பது வெறும் எண்ணிக்கை அல்ல, அது ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 100 நாட்களாக தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை அரசு தீவிரமாக செயல்படுத்தி வருவதாக அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக அரசின் இந்த குறுகிய கால சாதனைகளை பட்டியலிட்டுள்ள முதல்வர் விஜய், இது ஒரு தொடக்கம் மட்டுமே என்றும், வரும் காலங்களில் தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாக உயர்த்துவதே தனது இலக்கு என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

மக்களின் நம்பிக்கையை பெற்றதே இந்த அரசின் மிகப்பெரிய வெற்றி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வரின் இந்த வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Hindusthan Samachar / vidya.b