பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
தஞ்சாவூர், 17 ஆகஸ்ட் (ஹி.ச.) தஞ்சாவூர் மாநகர பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியில் விளையாட்டுத்துறை ஆசிரியராக பணியாற்றி வரும் சண்முகசுந்தராஜ், ஓய்வு பெற்ற நிலையில், பணி நீட்டிப்பு அடிப்படையில் தொடர்ந்து பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலைய
கைது


தஞ்சாவூர், 17 ஆகஸ்ட் (ஹி.ச.)

தஞ்சாவூர் மாநகர பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியில் விளையாட்டுத்துறை ஆசிரியராக பணியாற்றி வரும் சண்முகசுந்தராஜ்,

ஓய்வு பெற்ற நிலையில், பணி நீட்டிப்பு அடிப்படையில் தொடர்ந்து பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையைத் தொடர்ந்து சண்முகசுந்தராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மேலும், அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாகக் கூறப்படும் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வரும் திவ்யாவையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P