Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் 100 நாள் ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.
அவர் கூறுகையில்,
100 நாள் தவெக ஆட்சியில் எந்த சாதனையும் இல்லை. நூறு நாள் ஆட்சியில் எந்த ஒரு புதிய திட்டமும் கொண்டு வரப்படவில்லை,அறிவிக்கவும் இல்லை என்றார்.
2026 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டதாகவும், அவற்றில் முக்கியமான எந்த அறிவிப்புகளும் நிதிநிலை அறிக்கையிலோ, விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகளிலோ இடம்பெறவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
மேலும், சற்று முன்னர் கூட முதலமைச்சர் ஏதாவது அறிவிப்பார் என எதிர்பார்த்தோம்.
ஆனால், அதுவும் நடைபெறவில்லை.
தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததுதான் இந்த 100 நாள் ஆட்சியின் சாதனை”
என எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P