ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே டயர் வெடித்து மீன் லாரி கவிழ்ந்து விபத்து - சாலையில் சிதறிய 600 கிலோ மீன்கள்
ஸ்ரீவில்லிபுத்தூர், 17 ஆகஸ்ட் (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நேற்று இரவு மீன் ஏற்றிக்கொண்டு வேகமாக வந்து கொண்டிருந்த அந்த சரக்கு வாகனத்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின்
Fish-laden lorry overturns near Srivilliputhur


ஸ்ரீவில்லிபுத்தூர், 17 ஆகஸ்ட் (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நேற்று இரவு மீன் ஏற்றிக்கொண்டு வேகமாக வந்து கொண்டிருந்த அந்த சரக்கு வாகனத்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின் நடுவே தலைகுப்புற கவிழ்ந்தது.

இதில் வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த சுமார் 600 கிலோ மீன்கள் சாலை முழுவதும் சிதறி விழுந்தன. இந்த விபத்தில் வாகனத்தின் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த மீன்கள் அனைத்தும் தஞ்சாவூருக்கு விற்பனைக்காகக் கொண்டு செல்லப்பட்டவை ஆகும்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறையினர், சாலையில் சிதறிக் கிடந்த மீன்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b