கடந்த திமுக ஆட்சியில் 27 லட்சம் பேருக்கு பட்டா - முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தகவல்
சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழக சட்டப்பேரவையில் இன்று வருவாய்த்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சரும் தற்போதைய அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏவுமான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்தி
Former Minister K.K.S.S.R. Ramachandran.


சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழக சட்டப்பேரவையில் இன்று வருவாய்த்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சரும் தற்போதைய அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏவுமான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், திமுக அரசின் பட்டா வழங்கும் திட்டம் குறித்த முக்கிய புள்ளி விவரங்களை வெளியிட்டார்.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் மட்டும் சுமார் 27 லட்சம் பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஏழை, எளிய மக்கள் தங்களது சொந்த இடத்திற்கு உரிமை பெற வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக சென்னை மாநகரைப் பொறுத்தவரை, நீண்ட காலமாக பட்டா இன்றி தவித்த மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு விதிமுறைகளில் சிறப்பு தளர்வுகளை அறிவித்தது. அந்த தளர்வுகளின் அடிப்படையில் சென்னையில் மட்டும் 76 ஆயிரம் பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சென்னையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வசித்து வருபவர்கள், ஆக்கிரமிப்பு இடங்களில் குடியிருந்தாலும் அவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்துள்ளன என்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சட்டசபையில் விளக்கமளித்தார்.

Hindusthan Samachar / vidya.b