Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை , 17 ஆகஸ்ட் (ஹி.ச.)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான ரோகித் சர்மாவை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆசையில், ஒடிசாவை சேர்ந்த அவரது தீவிர ரசிகர் ஒருவர் சைக்கிளில் மும்பை வரை பயணம் மேற்கொண்டுள்ளார்.
24 நாட்கள் நீடித்த இந்த நீண்ட பயணத்தின் முடிவில், தனது கனவு நனவாகும் வகையில் ரோகித் சர்மாவை நேரில் சந்தித்துள்ளார்.
ரோகித் சர்மாவின் தீவிர ரசிகரான அந்த இளைஞர், அவரை சந்திக்கும் ஆவலில் ஒடிசாவில் இருந்து சைக்கிளில் புறப்பட்டார்.
வழியில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டபோதிலும், தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து பயணம் செய்து 24 நாட்களுக்குப் பிறகு மும்பையை சென்றடைந்தார்.
இதையடுத்து, அந்த ரசிகரின் நீண்ட பயணம் மற்றும் ரோகித் சர்மா மீதான அவரது அன்பு குறித்து அறிந்த ரோகித் சர்மா, அவரை நேரில் சந்தித்தார்.
அப்போது ரசிகருடன் சிறிது நேரம் உரையாடிய ரோகித் சர்மா, அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
மேலும், ஒடிசாவின் புகழ்பெற்ற ஜெகந்நாதரை நினைவுகூரும் வகையில் ஜெகந்நாதர் சிலை ஒன்றை ரோகித் சர்மாவுக்கு அந்த ரசிகர் அன்புடன் பரிசாக வழங்கினார்.
ரசிகர் அளித்த பரிசை ரோகித் சர்மா மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார்.
தனது ஆதர்ச கிரிக்கெட் வீரரை சந்திப்பதற்காக ஒடிசாவில் இருந்து மும்பை வரை 24 நாட்கள் சைக்கிளில் பயணம் செய்த ரசிகரின் விடாமுயற்சியும், அவரது கனவை நிறைவேற்றிய ரோகித் சர்மாவின் அன்பான செயல்பாடும் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA