ஐ.பி.எல் போட்டியில் அமைச்சர் மாத்திரை பயன்படுத்தியதாக உதயநிதி குற்றச்சாட்டு – சட்டப்பேரவையில் கடும் விவாதம்
சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச) சட்டப்பேரவையில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடும் விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ஐபிஎல் போட்டியின்போது அமைச்சர் ஒருவர்
Sar


Udh


சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச)

சட்டப்பேரவையில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடும் விவாதம் நடைபெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,

ஐபிஎல் போட்டியின்போது அமைச்சர் ஒருவர் மாத்திரை பயன்படுத்தியதாகக் கூறியதாகவும், அவர் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், போதைப்பொருள் வழக்குகளில் ஆளுங்கட்சியினர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதாகவும், போதைப்பொருள் பயன்படுத்திய காட்சிகளை உலகமே பார்த்துவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதற்கு அவை முன்னவர் செங்கோட்டையன், எதிர்க்கட்சித் தலைவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகவும், அவற்றுக்கான ஆதாரங்களை அவர் வழங்கியுள்ளாரா என்பதை அறிய விரும்புவதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர் சரத்குமார் பதிலளிக்கையில்,

மைதானத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார்.

மேலும், அந்த சம்பவம் நடைபெற்ற காலகட்டத்தில் திமுக ஆட்சி தான் நடைபெற்றதாகவும், அப்போது போதைப்பொருள் விற்பனை நடைபெற்றதை திமுக ஏற்றுக்கொள்ளுமா என்றும் கேள்வி எழுப்பினார்.

இதுபோன்ற விவகாரங்களை மீண்டும் மீண்டும் தெரிவிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பேசிய கே.என்.நேரு,

அமைச்சரைப் பற்றி புகார் தெரிவிக்கப்பட்டால் அதற்கு உரிய பதில் அளிக்கலாம் என்றும், ஆனால் அதை விடுத்து நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ₹888 கோடி வழக்கு குறித்து அமைச்சர் சரத்குமார் பேசுவது சரியல்ல என்றும் தெரிவித்தார்.

மேலும், “கார்டில் தடவுனீர்களே, அது என்ன?” எனவும் கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில்,

நூறு நாள் ஆட்சி அடுத்த 25 ஆண்டுகளுக்கான அடித்தளத்தை அமைத்த மக்களாட்சியாக செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

இந்த ஆட்சியை உருவாக்கிய இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அரசு எப்போதும் உண்மையாக இருக்கும் என்றும் கூறினார்.

மேலும், அமுதன், தனுஷ் ஆகிய இருவரையும் தங்களது சகோதரர்களாகக் கருதுவதாகவும், அவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அமைச்சர்கள் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

போதைப்பொருள் விவகாரம் முக்கியமான பிரச்சினை என்றும், காவல்துறையின் அறிக்கையை மட்டுமே நம்ப வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“காவல்துறையா? உயிரிழந்த மாணவர்களின் குடும்பமா?” என்ற சூழல் ஏற்பட்டால், முதல்வர் குடும்பத்தினரின் பக்கமே நிற்பார் என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

மீண்டும் பேசிய உதயநிதி ஸ்டாலின், ஜாபர் சாதிக் மீது குற்றச்சாட்டு எழுந்தவுடன் அவரை கட்சியிலிருந்து நீக்கியதாகக் குறிப்பிட்டார்.

ஆனால், தற்போதைய ஆட்சியில் போதைப்பொருள் விவகாரம் எந்த நிலையில் உள்ளது என்பதை மக்கள் பார்த்துக்கொண்டிருப்பதாக விமர்சித்தார்.

ஐபிஎல் போட்டியில் அமைச்சர் ஒருவர் மாத்திரை பயன்படுத்தியதாகக் கூறிய விவகாரத்தில், அந்த அமைச்சருக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை மீண்டும் கேள்வியாக எழுப்பிய உதயநிதி ஸ்டாலின், போதைப்பொருள் வழக்குகளில் ஆளுங்கட்சியினர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதாகவும், போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் காட்சிகளை உலகமே பார்த்துவிட்டதாகவும் கூறினார்.

அதற்காக ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளீர்களா? என அவர் அரசிடம் கேள்வி எழுப்பினார்.

Hindusthan Samachar / P YUVARAJ