Enter your Email Address to subscribe to our newsletters

ஜார்க்கண்ட், 17 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த இரண்டு பெண்களை காட்டு யானைகள் கூட்டம் மிதித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பார்கிபோனா கிராமத்தில் திங்கள்கிழமை காலை சுமார் 8.30 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
ராஜ்ரப்பா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சபீனா காதூன் (60), தனோ தேவி (37) ஆகிய இருவரும் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது அங்கு காட்டு யானைகள் கூட்டமாக வந்துள்ளது. யானைகள் தாக்கி மிதித்ததில் தனோ தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சபீனா காதூன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்த இருவரும் பார்கிபோனா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அப்பகுதியில் யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் காட்டு யானைகள் தொடர்ந்து நுழைவதால், பொதுமக்கள் குறிப்பாக வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P