மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு – 8,555 கன அடியாக உயர்வு
மேட்டூர், 17 ஆகஸ்ட் (ஹி.ச.) சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று வினாடிக்கு 6,179 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 8,555 கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம
மேட்டூர் அணை


மேட்டூர், 17 ஆகஸ்ட் (ஹி.ச.)

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று வினாடிக்கு 6,179 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 8,555 கன அடியாக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இன்று அணையின் நீர்மட்டம் 81.85 அடியாக உள்ளது. அணையில் தற்போது 43.82 டி.எம்.சி. அளவிற்கு நீர் இருப்பு உள்ளது.

அணையிலிருந்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், தொடர்ந்து வினாடிக்கு 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீர்வரத்து மற்றும் நீர் இருப்பு நிலவரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

நீர்வரத்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அணையின் நீர்மட்ட நிலவரத்தை ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam