செங்கல்பட்டில் ரூ.3.19 கோடி மதிப்பிலான புத்தூர் ஏரி புனரமைப்பு பணி - அமைச்சர் ஆனந்த் தொடங்கி வைத்தார்
சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.) வளர்ச்சியடைந்த பாரதம் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் (VB-GRAMG) கீழ், தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 10,185 வரத்துக் கால்வாய்கள் மற்றும் 809 ஏரிகள், குளங்க
An


சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.)

வளர்ச்சியடைந்த பாரதம் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின்

(VB-GRAMG) கீழ், தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 10,185 வரத்துக் கால்வாய்கள் மற்றும் 809 ஏரிகள், குளங்கள் மற்றும் ஊரணிகளை ரூ.500 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் இன்று தொடங்கப்பட உள்ளன.

மழைநீரை முறையாகச் சேமித்து, நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிப்பதுடன், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கான நீர்வளத்தைப் பாதுகாக்கவும் இப்புனரமைப்புப் பணிகள் முக்கிய பங்காற்றும்.

இதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியம், நெடுங்குன்றம் ஊராட்சியில் உள்ள புத்தூர் கிராம ஏரி வரத்துக் கால்வாயில் ரூ.3.19 கோடி மதிப்பீட்டிலான புனரமைப்புப் பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் N.ஆனந்த் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் நீர்நிலைகளைப் பாதுகாத்து, நீர்வளத்தை மேம்படுத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ