கமலாலய தரிசனம் நிகழ்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் - நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!
சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.) கமலாலய தரிசனம் நிகழ்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில், நம் பாரதத் தாயை போற்றும் கமலாலய தரிசனம் நிகழ்வுகள்! தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஆன
Nainar


சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.)

கமலாலய தரிசனம் நிகழ்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்,

அது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில்,

நம் பாரதத் தாயை போற்றும் கமலாலய தரிசனம் நிகழ்வுகள்!

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மிகம் மற்றும் கோவில் மேம்பாட்டுப் பிரிவு சார்பில், சென்னை கமலாலயத்தில் இன்று நடைபெற்ற “கமலாலய தரிசனம்” நிகழ்வுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினேன்.

தமிழகம் முழுவதும் உள்ள ஆன்மிகம் மற்றும் கோவில் மேம்பாட்டுப் பிரிவின் மாநில, மாவட்ட மற்றும் மண்டல் நிர்வாகிகள் பங்கேற்ற இக்கூட்டம், நமது ஆன்மிகப் பணிகளையும், பாரம்பரிய கோயில்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்கான செயல்பாடுகளையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.

நம் பாரத தேசத்தை காக்கும் பாரதத் தாயின் திருவுருவம் கம்பீரமாக வீற்றிருக்கும் கமலாலயம், ஒவ்வொரு தேசப்பற்றாளருக்கும் ஆன்மிக உணர்வையும், நாட்டுப்பற்றையும் ஒருங்கே வழங்கும் புனிதத் தலமாக திகழ்கிறது.

தமிழகம் முழுவதும் இருந்து நமது பாரதிய ஜனதா கட்சியின் காரியகர்த்தர்கள் அனைவரும் கமலாலயம் வந்து பாரதத் தாயை தரிசனம் செய்வது, நிச்சயம் பெரும் பாக்கியமும், மனநிறைவும் அளிக்கும் ஒரு புனித அனுபவமாக அமையும்.

இந்த நிகழ்வில் அனைத்து பிரிவுகளுக்கான மாநில அமைப்பாளர் ராகவன் அவர்கள், ஆன்மிகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில அமைப்பாளர் செல்வி அவர்கள், மாநிலச் செயலாளர் பிரமேலா சம்பத் அவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் பிரிவு அமைப்பாளர் திரு. சுந்தர்ராமன் அவர்கள் உடன் கலந்து கொண்டனர் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN