NTA குளறுபடிகளால் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பு - மாணிக்கம் தாகூர் கண்டனம்
சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.) NTA தேர்வு நடத்துவதில் தொடர்ந்து ஏற்படும் குளறுபடிகளால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 87 பாட
மாணிக்கம்


சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.)

NTA தேர்வு நடத்துவதில் தொடர்ந்து ஏற்படும் குளறுபடிகளால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

87 பாடப்பிரிவுகளில் அல்லும் பகலும் படித்து கடின உழைப்புடன் தேர்வு எழுதும் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை ஒன்றிய மோடி அரசின் நிர்வாக சீர்கேடும் தோல்வியடைந்த அமைப்பும் பாழாக்கியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மாணவர்களுக்கு Exam Warriors என வாழ்த்து தெரிவிக்கும் பிரதமர் மோடி, நிஜ வாழ்க்கையில் NTA குளறுபடிகளுடன் மாணவர்கள் போராட வேண்டுமா என கேள்வி எழுப்பியுள்ள அவர், NTAவின் தவறுகளுக்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்காமல் தட்டிக்கழிப்பதாக விமர்சித்துள்ளார்.

தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சராக இருந்த காலத்திலேயே அடிப்படை முறைகேடுகளும் குளறுபடிகளும் அரங்கேறியதாகவும், தற்போது கல்வித்துறையை பொறுப்பேற்றுள்ள பிரகலாத் ஜோஷியும் இந்த தொடர் நிர்வாக தோல்விகளுக்கு பொறுப்பேற்று பதில் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், NTA தனது நம்பகத்தன்மையை முழுமையாக இழந்துவிட்டதாகவும், மாணவர்களுக்கு National Testing Agency என்பதற்கு பதிலாக No Trust Agency ஆக மாறிவிட்டதாகவும் மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஒன்றிய அரசின் நிர்வாக தோல்விகளுக்கு அப்பாவி மாணவர்களை தொடர்ந்து பலிகடா ஆக்கக்கூடாது என்றும், NTA குளறுபடிகளுக்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P