Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அபாயகரமான அளவில் அதிகரித்துள்ளதாகவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கூட மிக எளிதாக கஞ்சா கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும் சட்டப் பேரவையில் பாமக எம்எல்ஏ கணேஷ் குமார் கவலை தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் சட்டம் ஒழுங்கு குறித்த விவாதத்தில் பேசிய அவர், மாநிலம் முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.
குறிப்பாக இளம் தலைமுறையினரை குறிவைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவது வேதனையளிப்பதாகவும், இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்தது போன்றே தற்போதும் கொலை சம்பவங்களும், பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்றும், சட்டம் ஒழுங்கை காக்க அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
Hindusthan Samachar / vidya.b