சேலத்தில் 13 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கைது- 14 பேரிடம் போலீஸ் விசாரணை
சேலம், 17 ஆகஸ்ட் (ஹி.ச.) சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த 13 வயது சிறுமி, 16 மற்றும் 17 வயதுடைய இரு சிறுமிகளுடன் பழகி வந்துள்ளார். சுமார் ஓராண்டுக்கு முன்பு நடைபெற்ற சிறுமியின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு, இரு தோழிகளும் தங்களது ஆண் நண்பர்
SCHOOL SEXUAL ASSULT


சேலம், 17 ஆகஸ்ட் (ஹி.ச.)

சேலம் மாவட்டம்,

கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த 13 வயது சிறுமி, 16 மற்றும் 17 வயதுடைய இரு சிறுமிகளுடன் பழகி வந்துள்ளார். சுமார் ஓராண்டுக்கு முன்பு நடைபெற்ற சிறுமியின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு, இரு தோழிகளும் தங்களது ஆண் நண்பர்களை அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

அங்கு சிறுமிகளுக்கு மது கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, சிறுமிகளைத் தனிமையான இடங்களுக்கு அழைத்துச் சென்று மது கொடுத்து பாலியல் ரீதியாகத் தொடர்ந்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, 13 வயது சிறுமி தொடர்ந்து பள்ளிக்கு வராததால் பள்ளி நிர்வாகம் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தது.

சிறுமியின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த அவரது தாயார், குழந்தைகள் நலத்துறையினரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து சிறுமியை மீட்டு குழந்தைகள் நலத்துறையினர் நடத்திய விசாரணையில்,

சிறுமியின் தோழிகள் மற்றும் அவர்களது ஆண் நண்பர்கள் உள்ளிட்டோர் தொடர்புடையதாகக் கூறப்படும் விவரங்கள் தெரிய வந்தன.

குழந்தைகள் நலத்துறையினர் அளித்த தகவலின் பேரில் வழக்கு சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

போலீசார் முதற்கட்டமாக 7 பேரை அடையாளம் கண்டு, அவர்களில் 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் மற்ற நபர்களைக் கண்டறிந்து கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமியுடன் இருந்த 16 மற்றும் 17 வயது சிறுமிகளுக்கும் பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P