பிரபல நடன இயக்குனர் ஸ்ருஷ்டி வர்மா - பா.ஜ.க.வில் இணைந்தார்!
ஐதராபாத் , 17 ஆகஸ்ட் (ஹி.ச.) பிரபல நடன இயக்குநரும், பிக்பாஸ் பிரமுகருமான ஸ்ருஷ்டி வர்மா அரசியலில் களமிறங்கியுள்ளார். ஐதராபாத்தில் உள்ள பா.ஜ.க. தெலுங்கானா மாநில பா.ஜ.க.வில் இன்று இணைந்தார். மாநில அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் மா
A


ஐதராபாத் , 17 ஆகஸ்ட் (ஹி.ச.)

பிரபல நடன இயக்குநரும், பிக்பாஸ் பிரமுகருமான ஸ்ருஷ்டி வர்மா அரசியலில் களமிறங்கியுள்ளார்.

ஐதராபாத்தில் உள்ள பா.ஜ.க. தெலுங்கானா மாநில பா.ஜ.க.வில் இன்று இணைந்தார்.

மாநில அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் மாநில தலைவர் என். ராமச்சந்தர் ராவ், ஸ்ருஷ்டி வர்மாவுக்கு கட்சித் சால்வை அணிவித்து வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ருஷ்டி வர்மாவுடன் மேலும் பலரும் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய ராமச்சந்தர் ராவ்,

இளைஞர்கள் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது என்றும், குறிப்பாக இளைஞர்கள் பா.ஜ.க.வில் இணைவது கட்சிக்கு கூடுதல் வலுசேர்க்கும், என்றார்.

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ருஷ்டி வர்மா, ஈடிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘டீ’, ‘டீ ஜோடி’ உள்ளிட்ட நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் தெலுங்கு ரசிகர்களிடம் பிரபலமானார்.

இதைத்தொடர்ந்து ‘பிக்பாஸ் தெலுங்கு சீசன் 9’ நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றார்.

தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வரும் அவர், ‘புஷ்பா-2’ படத்தில் இடம்பெற்ற ‘சூசேகி’ பாடலுக்கும், ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தின் ‘நுவ்வு காவாலய்யா’ பாடலுக்கும் நடன இயக்கம் செய்துள்ளார்.

மேலும் ‘அலா வைகுந்தபுரமுலோ’, ‘கிராக்’, ‘பீஸ்ட்’, ‘கேம் சேஞ்சர்’ உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களிலும் அவர் பணியாற்றியுள்ளார்.

திரையுலகில் தனக்கென அடையாளத்தை உருவாக்கியுள்ள ஸ்ருஷ்டி வர்மா, தற்போது பா.ஜ.க.வில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA