100 நாள் த.வெ.க ஆட்சி,நீண்ட தூர மக்கள் சேவையில் தொடரும் ஒரு புதிய தொடக்கம் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்
சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.) 100 நாள் தவெக ஆட்சி குறித்து கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதி தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்,தனது எக்ஸ் தளத்தில், மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற எண்ணத்துடன், ஒரு யுகத்தின் தலைவனாய்
MLA Kanimozhi Santhosh


சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.)

100 நாள் தவெக ஆட்சி குறித்து கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதி தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்,தனது எக்ஸ் தளத்தில்,

மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற எண்ணத்துடன், ஒரு யுகத்தின் தலைவனாய் செயல்படும் மக்கள் முதல்வர் தளபதி விஜய் அவர்களின் வழியில்… அவர்கள் எனக்கு வழங்கிய மக்கள் சேவை செய்வதற்கான வாய்ப்பை, பொறுப்பாகவும் கடமையாகவும் ஏற்று செயல்பட்டு வருகிறேன்.

அவர் காட்டிய பாதையில், மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்து, அவற்றுக்கு தீர்வு காண்பதையே எனது முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்த 100 நாட்களும் பணியாற்றியுள்ளேன்.

கவுண்டம்பாளையம் தொகுதி மக்களின் நம்பிக்கைக்கு உரிய வகையில், வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் மக்கள் நலனை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட பணிகளின் முழுமையான விவரங்களே இந்த 100 நாள் மக்கள் பணி அறிக்கை.

இது ஒரு நிறைவு அல்ல… நீண்ட தூர மக்கள் சேவையில் தொடரும் ஒரு புதிய தொடக்கம் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN