நான்கு நாள் விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் கூடும் சட்டப்பேரவை - அமுதன் கொலை விவகாரம் எதிரொலிக்குமா?
சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.) நான்கு நாள் விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. இன்று முதல் துறை வாரியான மானியக் கோரிக்கை விவாதங்கள் தொடங்கும் நிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல
சட்டப்பேரவை


சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.)

நான்கு நாள் விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. இன்று முதல் துறை வாரியான மானியக் கோரிக்கை விவாதங்கள் தொடங்கும் நிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற உள்ளது.

இதனிடையே, கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை விவகாரம் சட்டப்பேரவையில் இன்று முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர் கொலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொண்டு வரவுள்ள கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்புள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பு, கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் புழக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பாக எதிர்க்கட்சிகள் அரசிடம் கேள்வி எழுப்பக்கூடும்.

இதனால், துறை வாரியான மானியக் கோரிக்கை விவாதத்துடன் அமுதன் கொலை விவகாரமும் சட்டப்பேரவையில் அரசியல் ரீதியாக கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P