Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகமான டாஸ்மாக்கில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான வழக்கில், முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள ரதேஷ் ராஜ் சண்முகவேலுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை லுக்-அவுட் சுற்றறிக்கை பிறப்பித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் லஞ்ச ஒழிப்புத் துறையால் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் மொத்தம் 7 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ரதேஷ் ராஜ் சண்முகவேலும் ஒருவர். இவர் தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவரின் சகோதரர் என கூறப்படுகிறது.
டாஸ்மாக்கின் முக்கிய முடிவுகளில் அதிகாரப்பூர்வமற்ற இடைத்தரகராகச் செயல்பட்டு, சட்டவிரோதமாக செல்வாக்கு செலுத்தியதாக ரதேஷ் ராஜ் மீது லஞ்ச ஒழிப்புத் துறை குற்றம்சாட்டியுள்ளது.
வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ரதேஷ் ராஜ் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை லஞ்ச ஒழிப்புத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, அவர் வெளிநாடு உள்ளிட்ட இடங்களுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் லுக்-அவுட் சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களிடமும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அடுத்தகட்டமாக மேலும் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam