Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 17 ஆகஸ்ட் (ஹி.ச.)
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி பகுதியில் மாரியம்மன் கோவில்
ஆடி திருவிழாவின்போது ஆடியோ ஒலிப்பெருக்கியில் கானா பாடல்கள் ஒலிபரப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை திடீரென மோதலாக மாறிய நிலையில், அங்கு வந்த மர்ம கும்பல் இருவரையும் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிகிறது. மேலும், அவர்களின் முகத்தை சிதைக்கும் வகையில் கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்திற்குப் பிறகு தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலைக்கான முழுமையான காரணம், கொலையில் ஈடுபட்டவர்கள் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பவத்தின் பதற்றத்தைத் தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் படுநெல்லி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam