விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாள்- முதலமைச்சர் விஜய் வாழ்த்து
சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.) விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனுக்கு, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ்
திருமா


சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.)

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனுக்கு, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் விஜய்,

“சமூகநீதி, சமத்துவம், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் திருமாவளவனின் பொதுவாழ்வுப் பயணம் மென்மேலும் சிறக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திருமாவளவன் நல்ல உடல் நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டும் எனவும் தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விஜயின் இந்த வாழ்த்து அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

குறிப்பாக அவர் திருமாவளவனை அண்ணன் என குறிப்பிட்டுள்ளதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P