கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க வேண்டும் -தொல். திருமாவளவன்
அரியலூர், 17 ஆகஸ்ட் (ஹி.ச.) அரியலூர் மாவட்டம் அங்கனூரில் தனது சின்ன தாயார் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,தமிழக வெற்றிக் கழகத்தின
திருமாவளவன்


அரியலூர், 17 ஆகஸ்ட் (ஹி.ச.)

அரியலூர் மாவட்டம் அங்கனூரில் தனது சின்ன தாயார் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்,

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் ஆட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “எந்தத் துறையிலும் ஊழல் இல்லை என்ற அளவுக்கு பொதுமக்கள் பாராட்டும் வகையில் ஆட்சி நடைபெறுகிறது” என அவர் தெரிவித்தார்.

அமைச்சர்கள் சிலர் லஞ்சம் பெற்றதாக அண்ணாமலை தெரிவித்திருப்பது குறித்து பேசிய திருமாவளவன், அண்ணாமலை உரிய ஆதாரங்களுடன் முதலமைச்சரை சந்தித்து விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும், ஊழல் நடைபெறாத வகையில் முதலமைச்சர் தடுப்பு நடவடிக்கைகளை உறுதியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

கோவை மாணவர் அமுதன் கொலை குறித்து பேசிய அவர், கல்வி நிறுவனங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கம் இருப்பதை இந்த சம்பவம் உறுதிப்படுத்துவதாகக் கூறினார்.

இதுகுறித்து முதலமைச்சர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், தொடர்புடைய அனைவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கல்வி நிறுவனங்களில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டு படுகொலைகள் நடைபெறுவது அதிர்ச்சி அளிப்பதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P