Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை 2026-ஆம் ஆண்டுக்கான 3-ம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்ற மாணவர்கள், தங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்யும் பணி இன்று தொடங்கியது.
3-ம் சுற்று கலந்தாய்வுக்கு மொத்தம் 1,02,719 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களுக்கான விருப்பப் பதிவு ஆகஸ்ட் 17 முதல் 19-ஆம் தேதி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
பொதுப்பிரிவு தரவரிசையில் 1,31,094 முதல் 2,33,812 வரையிலான தரவரிசை பெற்ற மாணவர்களும், அரசுப் பள்ளி மாணவர் தரவரிசையில் 18,037 முதல் 46,080 வரையிலான தரவரிசை பெற்ற மாணவர்களும் 3-ம் சுற்று கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இரு பிரிவுகளிலும் கட்-ஆஃப் மதிப்பெண் 135.50 முதல் 77.50 வரை உள்ளது.
இதனிடையே, TNEA 2026-ன்
2-ம் சுற்று கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 9,967, பொதுப்பிரிவில் 49,984 என மொத்தம் 59,951 தற்காலிக இடஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
சிறப்பு இடஒதுக்கீடு, முதல் சுற்று மற்றும் 2-ம் சுற்று ஆகியவற்றை சேர்த்து இதுவரை 88,930 தற்காலிக இடஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
2-ம் சுற்றில் உயர்வு மூலம் இடஒதுக்கீடு பெற்ற மாணவர்கள், ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் செலுத்திய கட்டணம் மற்றும் TFC மையங்களில் சமர்ப்பித்த சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் ஏற்கனவே நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்கத் தவறிய மாணவர்களுக்கான துணை கலந்தாய்வு பதிவும் இன்று தொடங்கியுள்ளது.
தகுதியான மாணவர்கள் ஆகஸ்ட் 17 முதல் 31-ஆம் தேதி வரை துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ