Enter your Email Address to subscribe to our newsletters

ரஷ்யா , 17 ஆகஸ்ட் (ஹி.ச.)
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டு ராணுவ அமைப்பான நேட்டோவில் (NATO) உக்ரைன் இணைவதற்கு கடுமையான ஆர்வம் காட்டி வந்தது. உக்ரைன் நேட்டோவில் இணைந்தால், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ராணுவப் படைகளும், ஏவுகணைகளும் ரஷ்யாவின் எல்லைக்கு மிக அருகில் நிலைநிறுத்தப்படும்.
இது தனது நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று ரஷ்யா கருதியது. உக்ரைன் ஒருபோதும் நேட்டோவில் இணையக் கூடாது என்ற ரஷ்யாவின் கோரிக்கையை மேற்கத்திய நாடுகள் நிராகரித்ததே உடனடிப் போர் ஏற்படக் காரணமாகும்.
இந்த நிலையில் ரஷ்யாவின் ரோஸ்டோவ் பிராந்தியத்தில் அமைந்துள்ள முக்கிய ஏவுகணை எரிபொருள் உற்பத்தி ஆலை மீது இரவோடு இரவாக தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் பதற்றமான சூழலில் இந்த நடவடிக்கை ஒரு பெரும் தாக்குதலாக சர்சையைக் கிளப்பியுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான இந்த ஆலை, பல்குழல் ஏவுகணை அமைப்புகளுக்கு தேவையான திட ராக்கெட் உந்துபொருளை தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் பல்வேறு ஏவுகணை அமைப்புகளுக்கும், வான்வழி ஆயுதங்களுக்கும் தேவையான எரிபொருளையும் இந்த ஆலை வழங்கி வருகிறது. இதன் காரணமாகவே இந்த தாக்குதல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இரு நாடுகளும் தங்களது புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த சம்பவம் பகைமையின் மற்றொரு உச்சக்கட்டமாக பதிவாகியுள்ளது.
தொடர்ந்து நடைபெற்று வரும் மோதலில் இரு தரப்பின் ராணுவ திறன்களிலும் இந்த தாக்குதல் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b