வாணியம்பாடி அருகே செயல்படாத கல்குவாரியில் பெண் சடலம் மீட்பு – நகை, பணத்திற்காக கொலையா? போலீசார் தீவிர விசாரணை
திருப்பத்தூர் 17 ஆகஸ்ட் (ஹி.ச.) திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் தெற்கு, பாரத்நகர் பகுதியில் செயல்படாமல் உள்ள கல்குவாரியில் பெண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் வாணியம்பாடி கிராமிய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பே
பலி


திருப்பத்தூர் 17 ஆகஸ்ட் (ஹி.ச.)

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் தெற்கு, பாரத்நகர் பகுதியில் செயல்படாமல் உள்ள கல்குவாரியில் பெண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் வாணியம்பாடி கிராமிய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்,

கல்குவாரியில் கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சசிகலா (52) என்பது தெரியவந்தது.

இதனிடையே, சசிகலா 24 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.25 ஆயிரம் பணத்துடன் காணாமல் போனதாக, அவரது கணவர் அசோகன் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, சசிகலா காணாமல் போனது மற்றும் தற்போது வாணியம்பாடி அருகே சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சசிகலா அணிந்திருந்த நகை மற்றும் வைத்திருந்த பணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது கொலைக்குப் பின்னால் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam