கல்வியை மதிப்பெண்களைக் கொண்டு மட்டும் அளவிட முடியாது - துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு!
திருவாரூர், 17 ஆகஸ்ட் (ஹி.ச.) மத்தியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா, இன்று காலை சுமார் 11:00 மணியளவில் வளாகத்தில் உள்ள பல்நோக்கு அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்குப் பல்கலைக்கழக வே
Vice President C.P. Radhakrishnan


திருவாரூர், 17 ஆகஸ்ட் (ஹி.ச.)

மத்தியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா, இன்று காலை சுமார் 11:00 மணியளவில் வளாகத்தில் உள்ள பல்நோக்கு அரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவிற்குப் பல்கலைக்கழக வேந்தர் பத்மநாபன் தலைமை தாங்கினார்.

இந்தியாவின் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக இவ்விழாவில் கலந்து கொண்டார்.

பல்கலைக்கழகத் தரவரிசையில் இடம்பிடித்தவர்களுக்குத் தங்கப் பதக்கங்களையும் பட்டங்களையும் அவர் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து தேசிய அவர் பேசியதாவது:

தமிழக மத்தியப் பல்கலைக்கழகத்தின் 11வது பட்டமளிப்பு விழாவில் உங்கள் அனைவருடனும் இருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றைய தினம் இப்பல்கலைக்கழகத்தின் வாழ்வில் ஒரு மறக்க முடியாத மைல்கல்லாகும்.

இன்றைய காலகட்டத்தில் கல்வியை வெறும் தேர்வுகள் அல்லது மதிப்பெண்களைக் கொண்டு மட்டும் அளவிட முடியாது.

சுயமாகச் சிந்திக்கும் திறன், இணைந்து பணியாற்றும் திறன் மற்றும் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கற்கும் ஆர்வம் ஆகியவற்றைக் கொண்டே கல்வியை அளவிட வேண்டும்.

பல்வேறு துறைகளை உள்ளடக்கிய கல்வி, ஆராய்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கற்றல் ஆகியவற்றிற்கு தமிழக மத்திய பல்கலைக்கழகம் முக்கியத்துவம் அளிக்கிறது.

இன்று பட்டம் பெறவிருக்கும் ஒவ்வொரு பட்டதாரிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்தச் சாதனை உங்களுடையது மட்டுமல்ல.

உங்கள் நலனுக்காகவே எப்போதும் உழைத்த, மற்றும் நீங்கள் வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என்று எப்போதும் விரும்பி பிரார்த்திக்கும் உங்கள் பெற்றோருடையதுமாகும். பட்டம் பெற்ற பிறகும் கூட நீங்கள் கற்றலை ஒருபோதும் நிறுத்தக்கூடாது.

இவ்வாறு சி.பி ராதாகிருஷ்ணன் பேசினார்.

Hindusthan Samachar / vidya.b