இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் திருச்சி வருகை
திருவாரூர், 17 ஆகஸ்ட் (ஹி.ச.) திருவாரூர் அருகே உள்ள நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் (CUTN) 11-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக,இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகஸ்ட் 17 (இன்று) சென்னையில் இ
இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் திருச்சி வருகை


திருவாரூர், 17 ஆகஸ்ட் (ஹி.ச.)

திருவாரூர் அருகே உள்ள நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் (CUTN) 11-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக,இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகஸ்ட் 17 (இன்று) சென்னையில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

திருச்சி விமான நிலையத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர்கள் அவருக்கு வரவேற்பளித்தனர்.

மேலும் கல்வி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவருக்கு புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார்.

பின்னர் அவர் ஹெலிகாப்டர் மூலம் திருவாரூருக்குப் புறப்பட்டு சென்றார்.

அவருடன் அமைச்சர்

பெ. விஸ்வநாதன் , தமிழக ஆளுநர் ராஜேந்திர ஆர்லேகர் ஆகியோரும் உடன் சென்றனர்.

திருவாரூரில் அமைந்துள்ள, மத்தியப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் துணை ஜனாதிபதி இறங்கி, அங்கிருந்து சாலை வழியாகப் பட்டமளிப்பு விழா நடைபெறும் இடத்திற்குச் சென்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் துணை ஜனாதிபதி, பல்கலைக்கழகத்தில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்குத் தங்கப் பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வழங்கி, பட்டமளிப்பு விழா உரையையும் நிகழ்த்தவுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b